என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜலகண்டேஸ்வரர் கோவில்"
- 1981-ல் தண்ணீருக்காக 25 அடி ஆழ கிணறு தோண்டப்பட்டது
- 10 அடி ஆழத்தில் நைலான் வலையை அமைத்து கட்டி வைத்தனர்
வேலூர்:
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இக்கோவிலில் தண்ணீர் இல்லாததால், கோவிலின் உள்ளே 1981-ல் தண்ணீருக்காக 25 அடி ஆழ கிணறு தோண்டப்பட்டது.
மழைக் காலங்களில் இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் அங்குள்ள கிணற்றில் சில்லரை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அதில் போட்டு வந்தனர்.
பல ஆண்டுகளாக பக்தர்களால் கிணற்றில் போடப்பட்ட நாணயங்கள் நாளடைவில் குவிந்தன. கிணற்றில் இருந்து நாணய ங்களை எடுப்பதற்காக அதிகாரிகள் பலமுறை முயன்றனர். கிணற்றில் சேரும் சகதியுமாக இருந்ததால் நாணயங்களை எடுக்க முடியாமல் போனது. மேலும் கிணற்றில் போடப்படும் நாணயங்கள் கிணற்றின் உள்ளே விழாமல் இருப்பதற்காக 10 அடி ஆழத்தில் நைலான் வலையை அமைத்து கட்டி வைத்தனர்.
இந்த நிலையில் கிணற்றில் இருந்து நாணயங்களை எடுக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர் கிணற்றில் இறங்கி நாணயங்களை சேகரித்தனர். நாணயங்கள் கிணற்றில் சுவற்றிலும், சேற்றிலும் சிக்கி இருந்தது.
அதனை ஊழியர்கள் எடுத்தனர். அந்த சில்லறை காசுகளை எண்ணிய போது ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
- இந்த திருவிழா வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 1-ந்தேதி காலை 9 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
வேலூர் கோட்டையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கோட்டைக்கு வருபவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்கு தரிசனத்துக்காக வருகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்புர விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 24-ம் ஆண்டாக வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
அன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக 22-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி காலை 6 மணிக்கு பிறகு கொடியேற்றம் நடக்கிறது. தொடந்து விழா நாட்களில் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமும் நடக்கிறது.
1-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், காலை 10.25 மணிக்கு அம்பாள் அபிஷேகமும், வளையல் சாற்றுதல், அர்ச்சனை தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல கங்கா பாலார் ஈஸ்வரர் 22-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி பஞ்சபூத மகாயாகம் நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளினாலேயே ஸ்ரீ கங்காபாலார் ஈஸ்வரருக்கு கலச அபிஷேகம் செய்கிறார்கள்.
மேலும், இக்கோவிலில் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 26-ந் தேதி வரை ஒவ்வொரு வெள்ளியன்றும் ஆடி வெள்ளி விழா நடைபெறுகிறது. 6 வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் கோபுர தரிசனம் நடந்தது.
பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திருவெம்பாவை பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.
வேலூர் சுக்கையா வாத்தியார் தெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அதிகாலை கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத காசி விஸ்வநாதருக்கும், நடராஜருக்கும் விசேஷ அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் 6 மணிக்கு கோபுர தரிசனமும், சாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்